செய்திகள்

ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல்

ஈராக்கில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பாக்தாத்,

ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரேஷன் நகம்கழுகு என்ற பெயரில் ஈராக் எல்லையில் உள்ள குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து துருக்கி விமானப்படை விமானங்கள் வான் தாக்குதல் நடத்தின. இதில் குர்து இன போராளிகளின் 81 நிலைகள் நிர்மூலமாக்க பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஆபரேஷன் நகம்புலி என்ற பெயரில் குர்து இன போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை துருக்கி ராணுவம் தொடங்கியுள்ளது. அதன்படி ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள குர்து இன போராளிகளின் நிலைகளை குறிவைத்து தரை வழியாகவும் வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு