செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

மறைமலைநகரில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்தூர் திருப்பனந்த ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45), ரெயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காஞ்சனா (40). இருவரும் நேற்று மாலை செங்கல்பட்டில் இருந்து காட்டாங்கொளத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சேகரும், காஞ்சனாவும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை