செய்திகள்

பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதேபோல் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து மாலை அணிவித்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மீனாதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கூட்டாக இணைந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

மேலும் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட தலைவர் பச்சைமால் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்