ஹைதராபாத்
அவரது கோரிக்கைக்கு பாஜகவும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சரும் உள்ளூர் பாஜக தலைவருமான பங்காரு தத்தாத்ரேயாவும், மாநில அமைச்சரான கே டி ராமாராவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக ராமாராவ் தெரிவித்தார்.
கூட்டத்தில் மட்டுமின்றி டிவிட்டரிலும் ஓவைசியும், ராமாராவும் இந்த விஷயத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் ராமாராவ் ஹைதராபாத் பாரம்பரிய பட்டத்தைப் பெற தகுதியுள்ளது. எந்தவொரு நகரமும் இந்த கோரிக்கையை எழுப்பும் என்றால் அந்தப் பட்டியலில் ஹைதராபாத் முதலில் இடம் பெறும் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார். இது நீண்டதொரு நடைமுறை. மத்திய அரசிற்கு பரிந்துரையை அனுப்பி வைக்க வேண்டும். அது இப்பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கி யுனெஸ்கோவிற்கு அனுப்ப வேண்டும். அந்த அமைப்பு பின்னர் நகரத்திற்கு வருகை புரிந்து பார்வையிடும். இந்தத் தகுதியை பெற அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.