புதுடெல்லி,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியா, சீனா, மலேசியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே வாசிப்பு மற்றும் எழுத்து போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் 4 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா சார்பில் 20 பள்ளிகளை சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 5 மாணவ, மாணவிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் மதுரையை சேர்ந்த பி.ஆர்.நிமிஷா என்ற மாணவியும் ஒருவர். மற்ற 4 பேரும் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்கள். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஐ.பேடு, புத்தகங்கள், ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.