செய்திகள்

நசரத்பேட்டை அருகே சாலையோரம் கொட்டி கிடந்த காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள்

நசரத்பேட்டை அருகே சாலையோரம் கொட்டி கிடந்த காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள்.

பூந்தமல்லி,

நசரத்பேட்டை அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையோரம் சுமார் 400 கிலோ எடை கொண்ட காலாவதியான கிரீன் டீ தூள் பாக்கெட்டுகளை யாரோ கொட்டி சென்று உள்ளனர். இது தெரியாமல் அப்பகுதி மக்கள் சிலர், குவிந்து கிடந்த அந்த டீ தூள் பாக்கெட்டுகளை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அதை பார்த்துவிட்டு அவை காலாவதியானவை என கூறியதால், அதிர்ச்சி அடைந்த சிலர் அவற்றை மீண்டும் அங்கேயே போட்டு சென்றனர்.

அந்த டீ தூள் ஆஸ்திரேலியாவில் 2003-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 2005-ம் ஆண்டுடன் காலாவதியானதாக அந்த அட்டை பெட்டியில் அச்சிடப்பட்டிருந்தது. காலாதியான சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு அந்த டீ தூள் பாக்கெட்டுகளை இங்கு கொண்டு வந்து கொட்டிச் சென்றது யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்