செய்திகள்

ஆர்.கே.பேட்டை அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஆர்.கே.பேட்டை அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வெள்ளாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவர் சோளிங்கரில் இருந்து மோட்டார்சைக்கிளில் தனது கிராமத்திற்கு சென்றார்.

வழியில் தனியார் பெட்ரோல் நிலையம் எதிரே ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்த நெல் அறுவடை செய்யும் எந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் இறந்த பிரகாசுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், முத்துபாண்டியன் (9) என்ற மகனும், சாதனா ( 8) என்ற மகளும் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது