ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்த பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ண காடி பிரிவு மற்றும் ரஜோரி மாவட்டத்தின் கேரி பிரிவு ஆகியவற்றில் உள்ள கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது இன்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏற்பட்ட காயம் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த வியாழ கிழமை பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூர் மற்றும் கிர்னி பிரிவுகளில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. தொடர்ந்து குவாஸ்பா பிரிவில் மறுநாளும் தாக்குதல் நடத்தப்பட்டது.