செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதேபோல் பென்னாகரத்தில் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஞ்சப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் கோபால், வட்டார செயலாளர் முனியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய தாலுகாக்களில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிருஷ்ணகிரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் சிவராஜ் தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாவட்ட தலைவர் சுபத்திரா, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் கண்ணு, வட்ட குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் துரை, விவசாய சங்க வட்ட செயலாளர் ரஜினி, கணபதி இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 4 மாதங்களாக மக்கள் வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை 1 லிட்டர் ரூ.30 ஆகவும், டீசல் விலையை 1 லிட்டர் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்