செய்திகள்

கோட்டூர் அருகே பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து தி.மு.க. ஒன்றிய முன்னாள் துணை செயலாளர் சாவு

கோட்டூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தி.மு.க. ஒன்றிய முன்னாள் துணை செயலாளர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது 60). தி.மு.க. ஒன்றிய முன்னாள் துணை செயலாளர்.

இவர் உள்பட 3 பேர், விக்கிரபாண்டியம் கடைத்தெருவில் சாலையை அகலப்படுத்த மேற்கூரை பிரிக்கப்பட்ட பழைய கட்டிடத்தின் அருகில் நேற்று காலை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து சாவு

அப்போது திடீரென கட்டித்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெகதீசன் மகன் சரவணன் விக்கிரபாண்டியம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து