கோவை,
கோவை மின்வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம், தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, சுண்டபாளையம், செல்வபுரம்.
மாதம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், பேரூர்செட்டிபாளையம், காளம்பாளையம். தேவராயபுரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், காளியண்ணன் புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம்.
தொண்டாமுத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், தீனம்பாளையம், தாளியூர், குளத்துபாளையம், மேற்கு சித்திரைச்சாவடி.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூ.கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ்காலனி, நெ.4. வீரபாண்டி, இடிகரை, பூச்சியூர், சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், மாங்கரை, ஆனைக்கட்டி, பன்னிமடை, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.