செய்திகள்

இத்தாலியில் விமான விபத்து; 8 பேர் பலி

இத்தாலியில் சிறிய தனியார் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ரோம்,

இத்தாலி நாட்டின் வடக்கே சான் டொனேட்டோ நகரில் சிறிய தனியார் விமானம் ஒன்று மிலன் லினேட் விமான நிலையத்தில் இருந்து சார்டினியா விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில், 2 விமானிகள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 6 பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

அந்த விமானம் குடியிருப்புவாசிகள் யாரும் இல்லாத கட்டிம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்து உள்ளனர். தீயணைப்பு துறையினர் உடல் ஒன்றை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்