நாகப்பட்டினம்,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 660 மாணவர்கள், 10 ஆயிரத்து 161 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 821 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 363 மாணவர்கள், 9 ஆயிரத்து 221 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 584 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாணவர்கள் 83.07 சதவீதமும், மாணவிகள் 90.75 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி நாகை மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் 7.68 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மொத்தம் 87.45 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்னர். கடந்த ஆண்டு 85.97 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 1.48 சதவீதம் தேர்ச்சி அதிகம் ஆகும்.