காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக 25,070 மாணவிகளும், 21,171 மாணவர்களும் என மொத்தம் 46,241 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பொது பாடத்தேர்வில் 44,615 மாணவ- மாணவிகளும் தொழில் பாடப்பிரிவில் 1,626 மாணவ- மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 46,241 மாணவ- மாணவிகள் இந்த தேர்வில் கலந்துகொண்டார்கள்.
இதில் 41,571 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். சராசரியாக 89.90 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.69 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.04 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.19 சதவீதம் ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மாணவர்களை விட 6.85 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டு மாவட்டத்தின் தரம் 23-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மகேஸ்வரி, தாமோதரன், பிரபாகர், கிருஷ்ணன், மதிவாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.