செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரதமரின் தைரியமான முடிவு; ஆளுநர் பன்வாரிலால் பேச்சு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டது பிரதமர் மோடியின் தைரியமான முடிவு என ஆளுநர் பன்வாரிலால் பேசியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இதில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இதன்பின் ஆளுநர் பன்வாரிலால் பேசும்பொழுது, ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் வேகமுடன் வளர்ந்து வருகிறது. பிரதமரின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது என பேசினார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை