அரசியல் களம்

சட்டசபை தேர்தல் ஸ்டாலினுக்கும் - எனக்கும் இடையிலான போர்: விஜய் அதிரடி பேச்சு

மக்களின் துயரத்தைப் போக்க வெகுஜன சக்தியாக வந்ததுதான் தவெக என விஜய் கூறினார்.

வேலூர்,

வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசியதாவது:-

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்குத்தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். வார்த்தை மாற மாட்டோம். இது நிஜம்.

ஒரு பெரிய ஊரு. 4 ரோடு ஜங்ஷன். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏரியா. மத்தியில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நிற்கிறது. யாரும் அருகில் போக முடியவில்லை. அதை அடக்கினால்தான் அந்த இடம் அமைதியாகும். ஒரு சிலருக்குத்தான் அடங்கும். ஆனால், அவர்கள் இல்லை. அவர்களுடன் அருகில் உள்ளவர் நாங்கள் பார்க்காத மாடா என அடக்க சென்றனர். அனைவரையும் தூக்கிவீசிவிட்டது. கூட்டத்தை விளக்கி சிறுவன் ஒருவன் உள்ளே வந்தான். எங்களாலே முடியவில்லை. நீ போய் என்ன செய்வாய்?. அய்யோ பாவமே. இப்படி தனியா போய் மாட்டிக்கிட்டானே என்றனர்.

ஆனால், அந்த சிறுவன் கெத்தா உள்ளே சென்றான். மக்கள் பதற்றத்துடன் பார்த்தனர். அருகில் வரும்போது பையில் மறைத்துவைத்த புல்லுக்கட்ட காட்டுகிறான். மாடு மூடு மாறி புல்லுக்கட்டை சாப்பிட ஆரம்பித்தது. அதன்பிறகு வயல் வெளிக்கு அழைத்து சென்று மேயவிட்டு திரும்பினார்.

ஒரு பெரியவர் அந்த சிறுவனிடம் எப்படி அடக்குனாய் என்று கேட்டார். அது கோபமாக இல்லை. பசியோடுதான் இருந்தது. அதனால்தான் இப்படி செய்தேன். எனவே, சிறியவன், அனுபவம் இல்லாதவன் என்று எதுவுமே கிடையாது. பிரச்சினையை எப்படி தீர்க்குறோமோ என்பதுதான்.

அந்த காளை தேர்தல், பெரியவர் தமிழக மக்கள், அந்த சிறுவன் நான், நீங்கள், நம்ம தவெக. மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததால், ஸ்டாலின் சார் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பிய நேரத்தில், சரியான நேரத்தில் தவெக வந்துள்ளது. இந்த முரட்டு காளை கதை புரியவேண்டியவர்களுக்கு புரியும்.

நான் உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கும் என தெரியும். நம் ஆட்சி அமைந்ததும் கிராமம் கிராமமாக வந்து உங்களை சந்திப்பேன்.

ஸ்டாலின் சார் கொஞ்சம் நாளைக்கு முன்பு ஒரு உருட்டு உருட்டினார். இது தமிழ்நாடு, டெல்லிக்குமான தேர்தல் என்றார். நமக்கு புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி டீல் பண்ணவேண்டும் என்று நமது மக்களுக்கு தெரியும். நீங்கள் ஒன்றுக்கும் உதவாத பால் டப்பாவை உருட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

இந்த தேர்தல் தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். விஜய்யுக்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர். தூய சக்தி தவெக, தீய சக்தி திமுகவுக்கு இடையே நடக்கும் போர்.

அவர் ஆட்சியில் சூப்பர்ஸ்டார் மாநிலம் என்கிறார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சியில் அப்படி இருந்தது. இப்போது ஸ்டேண்டர்டு காமெடி நடக்கும் மாநிலமாக உள்ளது. உங்களை நம்பி தில்லா நிற்கிறேன். இது அதிசய தேர்தல். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுபோல. இந்த முறை ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். காரணம், நான் ஊழலை எதிர்க்கிறேன். அந்த காண்டு. ஆனால், போட்டி இரண்டே பேருக்கு இடையேதான். ஒன்னு தவெக, இன்னொன்று திமுக.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு விஜய், விஜி தான் தேர்தலில்தான் நிற்கப்போகிறார்கள். அப்ப உங்கள் ஓட்டு தவெகவுக்குத்தான். அது எதிர்க்கட்சிகளுக்கே தெரியும். அதனால்தான் நமக்கு எதிராக பேசுகிறார்கள். நானும் மக்களும் வேறு வேறு இல்லை. ரத்தமும் சதையும் மாதிரி. உணர்வும், உயிரும் மாதிரி. பிரிக்கவே முடியாது. இந்த விஜய் வேண்டுமா, ஸ்டாலின் சார் வேண்டுமா. யாரை நீங்கள் நம்புகிறீர்கள். திமுகவுக்கு போட்டி தவெகதான். இப்படி இருக்கும்போது, ஒரு சீரியஸ் கேள்வியை கேட்கிறேன். நீங்கள் அரசியலுக்கு வரும்முன் உங்கள் சொத்து என்ன. இப்போது உங்கள் சொத்து என்ன. வெளியிட முடியுமா. தொழில் மூலம் வந்தால் அதை வெளியிட முடியுமா. இதை கேட்டால் ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து நம்மீது சேற்றை வாரி பூசுவார்கள்.

எனக்கு புது நண்பர் ஸ்டாலின் சார் கிடைத்துள்ளார். அவர் எல்லோரும் நண்பர்கள் என்கிறார். அப்படி என்றால், கரூர் சம்பவத்துக்கு என்னை ஏன் சொல்கிறீர்கள். லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்தான் உங்கள் நண்பர்கள். தப்பான ஆட்சி உங்கள் ஆட்சி. இன்றைக்கு நிஜமாக நமக்கு ஆதரவாக ஒரு கோஷம், எங்கள் வாக்குச்வாசடி வெற்றி வாக்கு சாவடியாம். எங்கள் வாக்குசாவடி விஜய் வாக்குச்சாவடி என்பதுதான். ஜனநாயகம் என்பது சிறுபான்மையினர் உணர்வுகள் புனிதம் என நினைப்பது என்று அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இங்கே சில அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒருசில நேரங்களில் அமைதியாக இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது. மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிப்போம் என்றீர்களே, சொன்னீங்களே செஞ்சீங்களா. நிறைய கிராமங்களில் பஸ் வசதி இல்லை. ஆனால், இல்லவே இல்லை என்று சொல்வார்கள். முதல்-அமைச்சரிடம் ஒரு தங்கச்சி, எங்கள் ஊருக்கு மினி பஸ்சாவது விடுங்கள் என்றாரே, இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும். நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதியே இல்லை.

தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாகிவிட்டது. நாமும் கேள்வியாக கேட்கிறோம். ஆனால், பதில் வருவதே இல்லை. இந்த தீய சக்திக்கு எண்டு கார்டு போட வேண்டும் என்றால், அவர்களை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு பட்டனை அழுத்த வேண்டும். தேர்தலில் விசில் சின்னம் அருகே உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான்.

நமது ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நன்றாக இருக்கும். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும். கல்வியின் தரம் நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் தரம் உயர்த்தப்படும். மாநில மற்றும் மத்திய அரசை அனுகும் முறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும்.

மாநில கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.க்களில் பாதிக்கு பாதி பெண்கள் என்ற நிலை உருவாக்கப்படும். குடும்ப நலன்களை காக்க தனியாக நலவாரியம் அமைக்கப்படும். தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

அண்ணா அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், ஸ்டாலின் சார் கூட்டணி சேர்த்துக்கொள்கிறார். கொள்ளையடித்த பணத்தை கொஞ்சம் கொடுத்து கள்ளாப்பட்டி கூட்டணி அமைத்து வருகிறார். இப்படி மக்களை ஏமாற்ற முடியாது. இதுவித்தியாசமான விசில் புரட்சி தேர்தல். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மோடு மக்கள் இருக்கிறார்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.