அரசியல் களம்

பரபரப்பாகும் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்த விஜய்

தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்

கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க, சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்:

திரு. N.ஆனந்த். Ex. MI.A. கழக பொதுச்செயலாளர்

திரு. K.A. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்

திரு. ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

எனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள்.

தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இவர்கள் செயல்படுவார்கள். குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள்.

இந்த பணிகளைப் பொது செயலாளர் திரு. என். ஆனந்த உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களின் உறுதுணையோடு ஒருங்கிணைக்க உள்ள மாவட்ட வாரியான தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு, இணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தோழர்களும், அவர்களது பொறுப்பு மாவட்டங்கள் சார்ந்து, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு விவரம்:-