கோப்புப்படம் 
அரசியல் களம்

சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் - பாஜக நேரடியாக மோதும் தொகுதிகள் எவை?

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - பாஜக 4 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாஜக 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சியும் மதுரை மேலூர் தவிர மற்ற 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - பாஜக 4 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

உதகை: போஜராஜன் (பாஜக) - பி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்)

அறந்தாங்கி: கவிதா ஶ்ரீகாந்த் (பாஜக) - டி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்)

குளச்சல்: சிவகுமார் (பாஜக) - தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்)

விளவங்கோடு: விஜயதாரணி (பாஜக) - பிரவீன் (காங்கிரஸ்)