சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் பா.ம.க. (டாக்டர் அன்புமணி அணி) இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக, காமராஜர் அரங்க மேலாளரிடம் உரிய தொகை செலுத்தி முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பா.ம.க.வின் அன்புமணி தரப்பினர் வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து, பா.ம.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "இதற்கு முன்பு எங்கள் கட்சி கூட்டம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று இருக்கிறது. ஆனால், இப்போது பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதி அளித்துவிட்டு, பிறகு திடீரென ரத்து செய்துவிட்டனர். இதில் அரசியல் காரணம் உள்ளது" என்றார்.