அரசியல் களம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியா..? - ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பதில்

கோட்டையாக இருந்த தேனி மாவட்டம், அ.தி.மு.க.வின் ஓட்டையாக மாறிவிட்டது என்று ரவீந்திரநாத் விமர்சித்தார்.

சென்னை,

அதிமுக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் இருவரும் நேற்று தி.மு.க.வில் ஐக்கியமாகினர். அவர்களுடைய இந்த முடிவை அ.தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க.வில் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், 'அ.தி.மு.க. உங்களை நிராகரித்து வைத்திருந்ததே?. தேனி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருக்கிறதே?, நீங்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், 'முடிந்து போன கதையை பற்றி பேச வேண்டாம். தேனி அ.தி.மு.க.வின் கோட்டையாக நாங்கள் அங்கு இருக்கும் வரை இருந்தது. நாங்கள் அ.தி.மு.க.வில் இருந்து வந்துவிட் டோம். இனி அவர்களுக்கு அங்கு ஓட்டைதான். மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக் கிறது' என்றார்.