அரசியல் களம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு:-

டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன்குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொதுமக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

முகவரி:-

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழ்நாடு மாநிலக்குழு

“பாலன் இல்லம்”

எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை,

தியாகராயா நகர், சென்னை - 600 017

அலைபேசி எண் : 98408 54707

மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmai.com. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.