அரசியல் களம்

தலைமை எடுக்கும் முடிவு நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும்... மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் இந்த தேர்தலில் பலமாக ஒலிக்க தொடங்கியது.

சென்னை,

தமிழக அரசியலில் தி.மு.க. காங்கிரஸ் கூட் டணி என்பது நீண்டநாள் கூட்டணியாக மட்டுமல்லாமல், அது ஒரு கொள்கை சார்ந்த கூட்ட ணியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் காங்கிரசார் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் இந்த தேர்தலில் பலமாக ஒலிக்க தொடங்கியது.

த.வெ.க. எனும் புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தார். இதனால், ஆட்சியில் பங்கு என கோஷம் எழுப் பிய தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.

அதேவேளையில் தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியில் இன்னொரு தரப்பினர் உறுதியாக இருந்தனர். இதற்கிடையில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மேலிடம், '39 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கூட குறையக்கூடாது. கேட்டது கிடைத்தால் கூட்டணியில் தொடருவோம்' என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 2 ராஜ்யசபா சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு- உள்ளாட்சியில் பங்கு போன்றவற்றிலும் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தி.மு.க. தரப்பில், இதற்கு மேல் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறாமல் இழுபறியுடன் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “கருத்து வேறுபாடுகள் இருப்பது மனித இயல்பு. ஆனால் எந்த தனிநபரையும் விட கட்சியே உயர்ந்தது. தலைமையினர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும், ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை. ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய சக்தி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.