அரசியல் களம்

அதிமுகவுக்கு கொங்குநாடு விவசாயிகள் கட்சி ஆதரவு

அதிமுகவுக்கு கொங்குநாடு விவசாயிகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று, கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, விஸ்வகர்மா புரட்சி கழக மாநிலத் தலைவர் மனோ சோழவராயர், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் நரேஷ்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.