அரசியல் களம்

திருப்பூரில் சீமான் இன்று தேர்தல் பிரசாரம்

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

திருப்பூர்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான், தொகுதி வாரியாக சென்று தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்க யம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். மேலும் தேர்தல் செயல்பாட்டு வரைவுகளை எல்.இ.டி. திரையில் திரையிட்டு விளக்கி உரை யாற்றுகிறார். இதில் கட்சியினர், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.