அரசியல் களம்

செங்கோட்டையனால் சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்ததே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவர் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: செங்கோட்டையன் மக்களை வஞ்சித்துள்ளார். யாரையும் வளர விடமாட்டர் செங்கொட்டையன். திமிர் பிடித்த, பொறாமை குணம் கொண்டவரான செங்கோட்டையன் நாட்டிற்கு தேவையா? கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும் அகங்காரத்தின் காரணமாகவும் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டார் செங்கோட்டையன் மோசமான குணம் படைத்தவர்;

கட்சி தொண்டர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டவர். ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்ததே இல்லை; செங்கோட்டையன் மோசமான மனிதர் என ஜெயலலிதாவே கூறினார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது என்னுடைய தவறு..தனிப்பட்ட முறையில் பேசினால் செங்கோட்டையனுக்கு மரியாதை கொடுக்க முடியாது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அம்மா உணவகத்தில் மேம்படுத்தப்பட்ட உணவு வழங்கப்படும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். யாரையும் சிபாரிசுக்கு அழைத்து வர தேவையில்லை” என்றார்