சென்னை,
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், நிருபர்களிடம் கூறியதாவது:-
பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். கூட்டணி, அதிகார பகிர்வு உள்பட அனைத்து விசயங்கள் குறித்தும் 5 பேர் கொண்ட கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கையை கட்சி மேலிடத்துக்கு தெரிவிப்போம். கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். அதுவரை யாரும் கூட்டணி தொடர்பான விவரங்களை பேசக்கூடாது.
கூட்டணியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தமிழ்நாடு மக்கள் தெளிவானவர்கள். பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஏற்க மாட்டார்கள். தொண்டர்களின் கருத்துகள் கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டணியில் பங்கு இல்லை என திமுக தங்களிடம் இதுவரை சொல்லவில்லை. அதிகாரப்பூர்வமாக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்போது தான் திமுகவின் நிலைப்பாடு தெரியவரும். எங்கள் நிலையையும் எடுத்துச் சொல்வோம். அதன் பிறகு பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.