அரசியல் களம்

வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கண்கலங்கியது ஏன்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னையில் இருந்து வேலூர் வரும் வழியில் விஜய்யை பார்க்க 2 லட்சம் பேர் நிற்கிறார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

வில்லிவாக்கம் தொகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: - திமுக கொள்ளையடித்த பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க திட்டமிட்டு வருகிறது.சம்பாதிப்பதற்காக விஜய் அரசியலுக்கு வரவில்லை. என்னிடம் காரே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பிரமாணபத்திரத்தில் கொடுக்கிறார். ஆனால், 3 கோடி ரூபாய் காரில் செல்கிறார். விஜய் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். எந்த அழுத்தத்திற்கு பணியமாட்டேன் என்று விஜய் கூறியிருக்கிறார்.

கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட வலியால்தான் வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கண்கலங்கினார். சென்னையில் இருந்து வேலூர் வரும் வரையிலும் விஜய்யை பார்க்க 2 லட்சம் பேர் நிற்கிறார்கள். என்னால் உங்களை பார்க்க முடியவில்லையே என்ற வலியில் கண்கலங்கினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய்யை பார்த்துதான் திமுக அச்சப்படுகிறது. கரூரில் உரிய பாதுகாப்பு இல்லாமல் மக்கள் உயிரிழந்தார்கள். அவர்களின் நோக்கமே தவெகவை முடக்குவதுதான். தவெகவை முடக்குவதற்காகவே எஸ்.ஓ.பி கொடுத்து இருக்கிறார்கள்.

கூட்டத்திற்கான பாதுகாப்பை காவல்துறை கொடுக்க வேண்டும். ஆனாலும் போலீசார் வருவது போல வந்துவிட்டு செல்கிறார்கள். இன்னொரு பழிசொல்லை உருவாக்க திமுக எல்லா முயற்சிகளையும் செய்கிறது. அதற்காகத்தான் ஒவ்வொரு 10 நாளும் அனுமதி வாங்கிவிட்டு விஜய் பொறுமையாக வருகிறார். 18 மணி நேரம் சினிமாவில் உழைக்கும் விஜய், அரசியலில் 24 மணி நேரமும் உழைக்க தயாராக உள்ளார். ஆனால், விஜய் மீது அவதூறு பரப்புகிறார்கள். ” என்றார்