அரசியல் களம்

ராகுல்காந்தியின் சென்னை வருகை ஒத்தி வைப்பா..?

ராகுல்காந்தி வருகிற மார்ச் 5-ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது.

சென்னை,

தமிழகத்​தில் விரை​வில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்து அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தீவிர​மாக களத்​தில் இறங்​கி​ உள்​ளன.

இதனிடையே நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதமே சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதிச் செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் ராகுல்காந்தி வருகிற மார்ச் 5-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி 15 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்பதன் காரணமாக ராகுல்காந்தியின் வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.