செய்திகள்

‘பாப்’ பாடகி கேத்தி பெர்ரி கர்ப்பம்

‘பாப்’ பாடகி கேத்தி பெர்ரி கர்ப்பமாக உள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப் பாடகிகளில் ஒருவர், கேத்தி பெர்ரி (வயது 35). காமெடி நடிகர் ரூசல் பிராண்டை 2010-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். 2012-ம் ஆண்டு வரை அந்த பந்தம் தொடர்ந்தது. பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் கேத்தி பெர்ரிக்கும், நடிகர் ஆர்லண்டோ புளூமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலில் 2016-ம் ஆண்டு ஒரு பிரிவு ஏற்பட்டது.

ஆனால் இருவரும் 2018-ம் ஆண்டு மீண்டும் இணைந்தனர். மறுபடியும் காதலிக்கத்தொடங்கினர். இப்போது இவர்கள் திருமணம் செய்து கொள்ள காதலர் தினத்தன்று நிச்சயித்து உள்ளனர். என்ன வேடிக்கை என்றால் ஆர்லண்டோ புளூமும், முதலில் மிராண்டா கெர் என்ற மாடல் அழகியை மணந்து, 3 ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறந்த நிலையில் பிரிந்தவர் என்பதுதான்.

இந்த நிலையில், தற்போது கேத்தி பெர்ரி கர்ப்பமாக உள்ளார். இதை அவரே ஒரு இசை வீடியோவில் தெரிவித்துள்ளார். இனியும் இதை மறைப்பதற்கு இல்லை என கூறி உள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இவரை டுவிட்டரில் 10 கோடியே 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்