செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் ராம்நாத் கோவிந்த் வெற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 702044 வாக்குகளும், மீராகுமார் 367314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீராகுமாரும் 3சதவீதமும் பெற்றுள்ளனர். 21 எம்.பிக்க்கள் 77 எம் எல்..ஏக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


முதல் ஜனாதிபதி தேர்தல் (1952)

2வது ஜனாதிபதி தேர்தல் (1957)

3வது ஜனாதிபதி தேர்தல் (1962)

4வது ஜனாதிபதி தேர்தல் (1967)

5வது ஜனாதிபதி தேர்தல் (1969)

6வது ஜனாதிபதி தேர்தல்l (1974)

7வது ஜனாதிபதி தேர்தல் (1977)

*37 வேட்ப்பாளர்கள் மனிதாக்கல் 36 பேர் மனு தள்ளுபடி

8வது ஜனாதிபதி தேர்தல் (1982)

9வது ஜனாதிபதி தேர்தல் (1987)

10வது ஜனாதிபதி தேர்தல் (1992)

11வது ஜனாதிபதி தேர்தல் (1997)

12வதுஜனாதிபதி தேர்தல் (2002)

13வது ஜனாதிபதி தேர்தல் (2007)

14வது ஜனாதிபதி தேர்தல் (2012)

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்