செய்திகள்

தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து; 2 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே வாய்த்தகராறில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சவுந்தர்ராஜன்(வயது 30). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் சவுந்தர்ராஜன் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் இலுப்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்து அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினரான வேலன் மற்றும் அவருடன் இருந்த ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வேலன் மற்றும் அவருடன் வந்த நபர், சவுந்தர்ராஜனை தகாத வார்த்தைகளால் பேசி காய்கறி நறுக்கும் கத்தியால் அவரது இடது பக்க மார்பில் குத்தினர். பின்னர் இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த சவுந்தர்ராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து சவுந்தரராஜன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வேலன் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாகதேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு