செய்திகள்

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சென்னையில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர் மத்திய அரசை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பினர். குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் உதயநிதி ஸ்டாலினையும் திமுக நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது