செய்திகள்

கொரோனா உயிரிழப்புகளை குறைக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பெரிதும் உதவியது - அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா உயிரிழப்புகளை குறைக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பெரிதும் உதவியதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,12,494 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,371 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் டெல்லி முழுவதும் 2,276 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,968 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 19,155 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் (Pulse Oximeter) கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை குறைக்க பெரிதும் உதவியதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் எனப்படும் இந்த சூரக்ஷா கவாச் மூலம் வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளை டெல்லி அரசால் குறைக்க முடிந்தது. நோயாளிகள் தங்கள் ஆக்ஸிஜன் அளவு குறைவதைக் கண்டால், அவர்கள் உதவிக்கு எங்களை அணுகுவர். நாங்கள் உடனடியாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அவர்களின் வீட்டிற்கு அனுப்புகிறோம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்