செய்திகள்

ஐ.பி.எல்: கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் பவுண்டரிகளாக விளாசினார். மறுபுறம் சுப்மான் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி நிலைத்து நின்று ஆட, பவர்-பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

அவர்கள் இருவரும் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். திரிபாதி 34 ரன்களுக்கு அவுட் ஆனார்.

எனினும், தொடர்ந்து அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக சிதறடித்தார். அவர் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 49 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ராணா சிக்சர்களாக பறக்க விட்டார். அவர் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு