செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் ‘கியூஆர் கோர்டு’ பயிற்சி - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கியூஆர் கோர்டு பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கையில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா (அ.தி.மு.க.) கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், புதிய கல்விக்கொள்கையின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கியூஆர் கோர்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்தபயிற்சியை தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர்களும் கோரியுள்ளனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கான இந்த கோரிக்கையை பற்றி அரசு பரிசீலித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு