செய்திகள்

அச்சமற்ற தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன்; ராகுல் காந்தி புகழாரம்

அச்சமற்ற தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன் என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 86.

டி.என். சேஷன் கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துள்ளார். நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்றைய காலசூழலை போன்று இல்லாமல், பாகுபாடில்லாத, மரியாதைக்குரிய, தைரியம் வாய்ந்த மற்றும் அச்சமற்றவர்களாக ஒரு காலத்தில் தேர்தல் ஆணையாளர்கள் பதவி வகித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் திரு.டி.என். சேஷன். அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்