செய்திகள்

115–வது பிறந்தநாளையொட்டி காமராஜருக்கு ராகுல் காந்தி புகழாரம்

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜரின் 115–வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புதுடெல்லி,

தமிழக முன்னாள் முதல்அமைச்சர் காமராஜரின் 115வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் வலைத்தளத்தில், காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில், மக்களால் போற்றப்பட்ட, அன்பு செலுத்தப்பட்ட தலைவர், அதற்கெல்லாம் மேலாக மக்கள் சொல்வதை கேட்டு நடந்தவர். காமராஜரின் புகழ் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கவும், எங்களை வழிநடத்தவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.