செய்திகள்

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிந்தது ஊட்டி மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேதண்டவாள சீரமைப்புபணிகள்முடிவடைந்ததால் ஊட்டிமலைரெயில்போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதனால்சுற்றுலா பயணிகள்மகிழ்ச்சி அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குமலைரெயில்இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் வெளிநாடு மற்றும்உள்நாட்டு சுற்றுலாபயணிகள்மகிழ்ச்சியுடன் பயணம் செய்துமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்உள்ள இயற்கை எழில்காட்சிகளை கண்டுரசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரைவடகிழக்கு பருவமழை தீவிரமாகபெய்தது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டிமலைரெயில்பாதையில்கல்லாறு-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே 23 இடங்களில்மண்சரிவுஏற்பட்டது. இதனால்மலைரெயில்போக்குவரத்து கடந்த 16-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 14நாட்கள்ரத்துசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்துமலைரெயில்இருப்புப்பாதை பொறியாளர்கள்ஜெயராஜ்,நாகராஜ்ஆகியோர் தலைமையில்30-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள்ரெயில்பாதையைசீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ரெயில் பாதையில் விழுந்து கிடந்தராட்சத பாறைகள்வெடிவைத்து தகர்க்கப்பட்டுஅகற்றப்பட்டன. சரிந்து கிடந்த மண் தண்டவாளத்தில் இருந்துஅப்புறப்படுத்தப்பட்டது.

மேலும் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் ராக்பார்கள்அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டன.மலைரெயில் பாதையை சீரமைக்கும் பணி அனைத்தும் நேற்று முன்தினம் முடிந்தது.

இதையடுத்து, ஊட்டிமலைரெயில்போக்குவரத்து நேற்று முதல் தொடங்கும் என்று சேலம் கோட்டரெயில்வேநிர்வாகம் அறிவித்தது. இதையொட்டி மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம்மலைரெயில்போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு ஊட்டிக்குமலைரெயில்புறப்பட்டு சென்றது. இதில் 200-க்கும்மேற்பட்டசுற்றுலா பயணிகள்குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்துகுன்னூருக்கு காலை9.10மணிக்கு சிறப்புமலைரெயில்புறப்பட்டு சென்றது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு