செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ரஷியாவில் சுற்றுப்பயணம்

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை சோவியத் ரஷியா வென்றதன் 75-வது நினைவு தினத்தை ரஷியா சிறப்பாக கொண்டாடுகிறது. இதையொட்டி பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு ஒன்றை மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த அணிவகுப்பு தள்ளி வைக்கப்பட்டது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் 24-ந்தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ரஷியா செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர் 2-ம் உலகப்போர் வெற்றி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே மாஸ்கோவில் நடைபெறும் இந்த பிரமாண்ட அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முப்படைகளில் இருந்து 75 வீரர்களை கொண்ட குழு ஒன்று ஏற்கனவே ரஷியா சென்று உள்ளது. இந்த குழுவினர் சீன பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 11 நாடுகளின் வீரர்களுடன் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து