போபால்,
மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த 10-ந்தேதி காங்கிரசில் இருந்து விலகினார். 11-ந்தேதி பா.ஜனதாவில் இணைந்தார். மத்தியபிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். போபாலில், பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து சட்டசபை செயலகத்துக்கு சென்று, தேர்தல் அதிகாரியான சட்டசபை முதன்மை செயலாளர் ஏ.பி.சிங்கிடம் மனுவை அளித்தார்.
அப்போது, முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மாநில பா.ஜனதா தலைவர் வி.டி.சர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.