செய்திகள்

தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களான கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின்பொழுது, ஆரத்தி எடுக்கும்பொழுது கனிமொழி தரப்பில் பணம் தந்தனர் என புகார் உள்ளது. இதேபோன்று வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கதிர் ஆனந்திற்கு உரிய பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் சிக்கின என புகார் உள்ளது.

இதனால் அவர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை