செய்திகள்

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,420 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்கள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக பொதுநிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு மேலும் ரூ.490 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு