செய்திகள்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரருக்கு 4 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தினத்தந்தி

மும்பை,

புனேயை சேர்ந்த போலீஸ்காரர் சந்தோஷ். இவர் வீட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ள முன் பணம் கேட்டு மும்பை டி.ஜி.பி. அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அவரது மனுவை மும்பையில் உள்ள டி.ஜி.பி. அலுவலக போலீஸ்காரர் பலீராம் ஷிண்டே என்பவர் பரிசீலித்தார். அவர் ரூ.20 ஆயிரம் தந்தால் கடன் வழங்க காலதாமதம் இன்றி ஒப்புதல் அளிப்பதாக சந்தோசிடம் கூறினார்.

இது குறித்து சந்தோஷ் லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தோசிடம் இருந்து ரூ.10 ஆயிரம் வாங்கியபோது, பலீராம் ஷிண்டேயை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதில், போலீஸ்காரர் பலீராம் ஷிண்டே மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு