புதுடெல்லி,
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி 28 மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிதியானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்பு ஆகிய பணிகளில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி தமிழகத்திற்கு ரூ.901.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.