செய்திகள்

ஆதாரம் இல்லாமல் சதாஃப் ஜப்பார், தாராபூரி ஆகியோரை கைது செய்தது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

ஆதாரம் இல்லாமல் சதாஃப் ஜப்பார், தாராபூரி ஆகியோரை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தது ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபூரி, காங்கிரஸ் கட்சியின் சதாஃப் ஜப்பார், போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் எவ்வித கலவரத்திலும் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை என பேலீசார் அறிக்கை அளித்தனர். இதைத் தெடர்ந்து, நீதிமன்றம் அவர்களை ஜாமினில் விடுவித்தது.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம், ஆதாரம் இல்லாமல் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். அவர்களை நீதிமன்றம் ரிமான்ட் செய்தது, ஆதாரம் இல்லாமல், காவலில் வைக்க உத்தரவிட்டது எப்படி என சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஆதாரத்தை பார்த்து கைது செய்ய சட்டம் செல்கிறது என்றும், ஆனால், நடைமுறையில் அதை செய்யாதது வெட்கப்பட வேண்டியது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு