செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனை

செப்டம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வருமாறு:

ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மொத்தம் 62,757 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது 62,285-ஆக இருந்தது. ஆக, விற்பனை 1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. உள்நாட்டில் இந்நிறுவனம் 47,781 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 4.5 சதவீத சரிவாகும். சென்ற ஆண்டு இதே மாதம் அது 50,028-ஆக இருந்தது. எனினும் ஏற்றுமதி 22.2 சதவீதம் உயர்ந்து (12,257-ல் இருந்து) 14,976 கார்களாக அதிகரித்து இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 7,69,139 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது 7,20,739-ஆக இருந்தது. ஆக விற்பனை 6.72 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது.

சுசுகி மோட்டார்சைக்கிள்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், உள்நாட்டில் 63,140 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது 50,808-ஆக இருந்தது. ஆக, விற்பனை 24.27 சதவீதம் உயர்ந்துள்ளது.

போர்டு இந்தியா

போர்டு இந்தியா நிறுவனம், உள்நாட்டில் மொத்தம் 8,239 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8,769-ஆக இருந்தது. ஆக, விற்பனை 6.04 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி (7,756-ல் இருந்து) 11,739-ஆக அதிகரித்துள்ளது. ஆக, ஒட்டுமொத்த அளவில் இந்நிறுவனத்தின் விற்பனை (ஏற்றுமதி உள்பட) 31 சதவீதம் வளர்ச்சி கண்டு (16,525-ல் இருந்து) 19,988-ஆக அதிகரித்து இருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், ஏற்றுமதி உள்பட மொத்தம் 13,078 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது 13,678-ஆக இருந்தது. ஆக, விற்பனை 4.39 சதவீதம் சரிவடைந்துள்ளது.

உள்நாட்டில் மட்டும் இந்நிறுவனம் 12,512 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனை 12,335 கார்களாக இருந்தது. இது 1.43 சதவீத வளர்ச்சியாகும். எனினும் இந்நிறுவனத்தின் எடியோஸ் கார்கள் ஏற்றுமதி 58 சதவீதம் சரிவடைந்து (1,343-ல் இருந்து) 566-ஆக குறைந்துள்ளது.

மகிந்திரா டிராக்டர்

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், 37,581 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது 45,788-ஆக இருந்தது. ஆக, டிராக்டர்கள் விற்பனை 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் விற்பனை 19 சதவீதம் குறைந்து (44,220-ல் இருந்து) 35,953-ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஏற்றுமதி 4 சதவீதம் அதிகரித்து (1,568-ல் இருந்து) 1,628-ஆக உயர்ந்துள்ளது.