புதுடெல்லி,
தெலுங்கானா மாநிலத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற 4 பேரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலுமான கபில்சிபல் டுவிட்டரில் இதுபற்றி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தெலுங்கானாவில் நடந்த என்கவுண்ட்டர் காட்டுமிராண்டித்தனமான தலீபான் பாணியிலான நீதி வழங்கும் முறை என்றும், இது நாகரிகமான நடைமுறை மற்றும் கோர்ட்டுகளை அர்த்தமற்றதாக்கிவிடும் என்றும் கூறி உள்ளார்.