செய்திகள்

அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற 5 மருந்து கடைகளின் உரிமம் ரத்து

அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற 5 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

காசியாபாத்,

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தில் மக்கள் பாதுகாப்புக்காக முகக்கவசம் மற்றும் கைகழுவும் சோப்புகளை வாங்கி வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சில மருந்து கடைகளில் இவைகளை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மருந்து கடைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டது. அதிகாரிகள் மருந்து கடைகளுக்கு சென்று முகக்கவசம் வாங்கினர். சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றதுடன், பில் தர மறுத்தனர். இதுதொடர்பாக 5 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்