செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த அருணாசலம் மகன் வினோத் என்ற வினோத் கண்ணன் (வயது 30). இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 7 வயது சிறுமியை பார்த்தார். பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனைக்கண்ட அந்த சிறுமியின் தாயார், வினோத்தை கண்டித்தார். அப்போது வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து, வினோத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் ரூ.25 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அளிக்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால்கனி ஆஜரானார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?