மும்பை,
சிந்துதுர்க் சிபியில் அமைக்கப்பட்டு உள்ள விமான நிலையம் மராட்டிய தினமான மே 1-ந் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
கொங்கன் கடற்கரையில் நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொங்கன் கடலோர சாலையும் விரைவுபடுத்தப்படும். குடிநீர் வழங்கல், மாம்பழம் மற்றும் முந்திரி உற்பத்தி மற்றும் கொங்கனில் மீனவர்களின் குறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசாங்கம் தீர்வு காணும்.
இவ்வாறு அவர் பேசினார்.